மதுரை  திருமங்கலம் மின் பகிர்மான செயற்பொறியாளர் பி

மதுரை
 	திருமங்கலம் மின் பகிர்மான செயற்பொறியாளர் பி
Updated on
1 min read

மதுரை

 திருமங்கலம் மின் பகிர்மான செயற்பொறியாளர் பி.முத்தரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கப்பலூர் துணை மின்நிலையத்துக்குட்பட்ட நிலையூர் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஓம்சக்தி நகர், நிலையூர், பிஆர்சி காலனி, கைத்தறி நகர், அரவிந்த் நகர், இந்திரா நகர், ஹார்விபட்டி, எஸ்.வி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 கே.கே.நகர் மதுரை பெருநகர் வடக்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் ந.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கே.கே.நகர் பிரிவு பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (மே 28) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சென்ட்ரல் மார்க்கெட், ஆர்ச் பகுதி, மாவட்ட நீதிமன்றம் எதிர்புறம், கரும்பாலை காலேஜ் ரோடு, மல்லிகை குடியிருப்பு பகுதி, வக்பு போர்டு கல்லூரி எதிர்புறம் உள்ள பகுதிகள், அருள்மலர் காம்பவுண்டு, மானகிரி மேற்கு, கரும்பாலை இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in