

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப் பட வேண்டும் என்று, தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் வழங்கப்படும் பாதுகாப்பு பொருட்கள், சிகிச்சை பொருட்கள், வாகன ஆதரவு, ரத்த தானம், உணவுப் பொருட்கள், தொலைபேசி ஆலோசனை மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றலாம். இதற்காக https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் அல்லது msktirunelveli@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் அல்லது msktirunelveli@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய வேண்டும்