

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,957 ஹெக்டேரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் கிடை க்க வசதியாக உரக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா. கஜேந்திரபாண்டியன் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 1,957 ஹெக்டேர் பரப்பில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் தொடங்கும் கார் பருவ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். மேலுரங்கள் மற்றும் அடியுரங்கள், விதைகள், பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லி மருந்துகள் கிடைக்கும் வகையில், அனைத்து உரக்கடைகளும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை முறைகளை பின்பற்றி உரம் விற்பனை மேற்கொள்ள உர விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.