

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஒருசில நாட்களாக குறைந்துவரும் நிலையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 84 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 100 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 31,430 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் அன்பின் மனநல காப்பகத்தில் கரோனா தடுப்பூசி போடும்பணி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு ஆய்வு செய்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்தி குளோரி எமரால்ட், அரசு மருத்துவமனை மருத்துவர் ரஞ்சித், அன்பின் இல்ல இயக்குநர் செல்வராஜ், பள்ளி முதல்வர் திலகவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.