விருத்தாசலத்தில் கரோனா தடுப்பூசி முகாம் : அமைச்சர் சி.வெ. கணேசன் தொடக்கி வைத்தார் :

விருத்தாசலத்தில்  கரோனா தடுப்பூசி  முகாம் : அமைச்சர் சி.வெ. கணேசன் தொடக்கி வைத்தார் :
Updated on
1 min read

விருத்தாசலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடைபெற்றது.

மங்கலம்பேட்டை வட்டார சுகாதார மருத்துவமனை சார்பில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நடைபெற்ற தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் சி.வெ. கணேசன் தொடக்கி வைத்தார். கடலூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், வட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் வரவேற்று பேசினார். அப்போது திருமணமான கோலத்தில் புதுமண தம்பதியர் முகாமில் கலந்து கொண்டனர். புதுமண தம்பதிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் வாழ்த்து தெரிவித்தார். இதில் திமுக நகர செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in