

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி சார்பில், ஊரடங்கு காலத்தில் நீட் தேர் வுக்கு தயாராவது குறித்த இணையவழி கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு பள்ளிச் செயலாளர் கே.மீனா தலைமை வகித்தார். பள்ளி தலைமை செயல் அலுவலர் கே.சந்திரசேகரன், இயக்குநர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு பயிலும் மாணவி பிரைஸ் நெட்ஸ்லாவ்னி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது: மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மாணவர்களின் நலம் விரும்பியாக, நண்பர்களாக, பெற்றோர்களாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். மருத்துவக் கல்வி என்பது சேவை செய்வதற்காகத் தான் என்பதை உணர்ந்து அதை கற்று சேவையாற்ற வேண்டும்.
கவனச் சிதறல் இல்லாத படிப்பு, காலத்தை சரியான நேரத்தில் பயன்படுத்துதல், கிடைக்கும் வாய்ப்புகளை அதிகளவில் பயன்படுத்துதல் ஆகியவற்றை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். பாடத்தில் உள்ள எம்சிகியூ வினாக்களை பயிற்சி எடுத்து இறுதியாக திருப் புதல் செய்ய வேண்டும். அதிகப் படியான நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வு பயம் இருக்கக்கூடாது. ஆரோக்கியமான உணவு, தடையின்றி 6 முதல் 8 மணி நேர உறக்கம் ஆகியவை அவசியம். நம் பிக்கை, சுயஒழுக்கம், சுய முயற்சி ஆகியவற்றை கடைபிடித்தால் நாம் எதிர்பார்க்கும் வாழ்வு அமையும் என்றார்.
மாணவர்களின் சந்தேகங்களுக்கும் அவர் பதிலளித்தார். பள்ளியின் முதுநிலை முதல்வர் பத்மா சீனிவாசன், முதல்வர் ஆ.பொற்செல்வி, துணை முதல் வர் ரேகா மற்றும் ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி மற்றும் சந்தா னம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக ஆசிரி யர் மு.அருணா வரவேற்றார். நிறைவாக ஆசிரியர் நிர்மலா நன்றி கூறினார்.