

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் காவல் துறை சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி பைகள் மற்றும் காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கலந்துகொண்டு, 100 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
அவர் பேசும்போது, “ ஊரடங்கால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்” என்றார்.
ஏடிஎஸ்பி கோபி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.