

தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீஸாருக்கு ரூ.22.50 லட்சம் மதிப்பில் 3 புதிய போலீரோ ஜீப்களை தமிழக அரசுவழங்கியுள்ளது. இந்த புதிய ஜீப்களை முத்தையாபுரம், புதுக்கோட்டை மற்றும் செய்துங்கநல்லூர் ஆகிய 3 நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸார் பணிக்குஒதுக்கீடு செய்து, அதன் சாவிகளை அந்தந்த வாகன ஓட்டுநர்களிடம் எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார். நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படாமல் தடுத்தல், விபத்து ஏற்பட்டவர்களுக்கு முதலுதவிகள் செய்தல், நெடுஞ்சாலையில் குற்றங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுதல் போன்ற பணிகளை போலீஸார் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.