திருமணி கிராமத்தில் உள்ள - தடுப்பூசி தொழிற்சாலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு :

நிறுவன இயக்குநர் டாக்டர் விஜயன், தொழில்துறை முதன்மைச் செயலர்  நா.முருகானந்தம், உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்.படம்: எம்.முத்துகணேஷ்
நிறுவன இயக்குநர் டாக்டர் விஜயன், தொழில்துறை முதன்மைச் செயலர் நா.முருகானந்தம், உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்.படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் திருமணி கிராமத்தில் 2012-ல்100 ஏக்கரில் மத்திய அரசின்சார்பில் எச்எல்எல் பயோடெக் தடுப்பூசி தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

இங்கு, தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி.ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் தயாரிக்கும் வகையில் கட்டமைப்புகள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும், 200-க்கும்மேற்பட்டோர் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இதற்கு அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவாக ரூ.594 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், காலதாமதம் காரண மாக 2019-ல் ரூ.904.33 கோடியாக திட்டச் செலவு அதிகரித்தது. இதை நிதி அமைச்சகம் நிராகரித்தது. நிதிப் பற்றாக்குறையுடன் செயல்பட முடியாது என 2019 ஜூன் மாதம்தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்தது. இதனால், நிறுவன ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை உள்ளது. மேலும் 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

மத்திய அமைச்சர் உறுதி

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தடுப்பூசி மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவரிடம், திருமணி, நெம்மேலி, மேலேரிப்பாக்கம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in