திருச்செந்தூரில் பக்தர்கள் இன்றி வைகாசி விசாகத் திருவிழா :

வைகாசி விசாகத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பதால்,  வெறிச்சோடி காணப்பட்ட திருச்செந்தூர் கடற்கரை.
வைகாசி விசாகத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பதால், வெறிச்சோடி காணப்பட்ட திருச்செந்தூர் கடற்கரை.
Updated on
1 min read

முருகப்பெருமான் அவதரித்த தினம் வைகாசி விசாகத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபடுவர். கரோனா ஊரடங்கால், நேற்று வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கோயில் வளாகமும், கடற்கரையும் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஆனால், ஆகம விதிப்படி வழக்கம்போல சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in