

சேலத்தில் நேற்று மாலை பலத்த காற்று, இடியுடன் கோடை மழை பெய்தது. இதனால், நகரின் தாழ் வான பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் புயலாக உருபெற்ற நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித் திருந்தது.
சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதியில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசியதோடு, வானில் கார் மேகம் சூழ்ந்தது. மாலை 5 மணிக்கு பலத்த காற்று, இடியுடன் மழை பெய்ய தொடங்கி 7 மணி வரை நீடித்தது. பகலில் கோடை வெயில் வாட்டிய நிலையில், மழையால் இரவு குளிர்ந்த சீதேஷ்ண நிலை நிலவியது.
கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் தாழ்வான பகுதி சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சேலம் கிச்சிப்பாளை யம், பச்சப்பட்டி, நாராயணன் நகர், சேர்மேன் ராமலிங்கம் ரோடு, சூரமங்கலம், சின்னதிருப்பதி, தாதகாப்பட்டி, கருங்கல்பாளையம், முல்லை நகர், தாதுபாய் குட்டை ரோடு, குகை, செவ்வாய்ப் பேட்டை, லீபஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.
அதேபோல, சாக்கடை கால்வாய்களிலும் மழைநீர்கழிவு நீருடன் பெருக்கெடுத்து ஓடிய தோடு, பல இடங்களில் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி யதால், வாகன போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் இடையூறு இல்லாத நிலை ஏற்பட்டது.