முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் - தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: ஆட்சியர் :

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும்   -  தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை: ஆட்சியர் :
Updated on
1 min read

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சு.சிவராசு எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றிருந்தும், கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என புகார்கள் வரப்பெறுகின்றன.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை அளிக்க மறுத்தால் அந்த மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் குறித்து 1800 425 3993 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in