

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே பச்சிளங் குழந்தை அட்டை பெட்டியில் எரிந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை அருகே தனியார் பாலி டெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு அருகாமையில் வைக்கோலுடன் அட்டைப்பெட்டி ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. அந்த இடத்தில் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் எரிந்த நிலையில் இருந்த அட்டைப்பெட்டியை பார்த்தனர்.
அதில், 2 நாட்களுக்கு முன்பு பிறந்த பச்சிளங் குழந்தையின் உடல் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு வேலூர் கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் எரிந்த நிலையில் இருந்த குழந்தையின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே கருகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்குள் அரசு மருத்துவமனையில் யாருக் கெல்லாம் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைகள் தற்போது தாயாருடன் உள்ளதா? அல்லது யாராவது குழந்தையுடன் வெளி யேறியுள்ளார்களா? அவர்களின் பெயர், முகவரி ஆகிய விவரங் களை காவல் துறையினர் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.