

திருப்பூர் மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையாக விளங்குவது, தாராபுரம் சாலையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனை டீனாக பணிபுரிந்து வந்த வள்ளி சத்தியமூர்த்தி கடந்த 17-ம் தேதிமாற்றப்பட்டார்.
சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரிடீனாக இருந்த முருகேசன், திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர்நேற்று பொறுப்பேற்றுக்கொண் டார். இவருக்கு, திருப்பூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நிர்வாக அலுவலக ஊழியர்களின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.