‘கரோனா தடுப்பு களப்பணிக்கு ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது’ :

‘கரோனா தடுப்பு களப்பணிக்கு ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது’ :

Published on

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்டச்செயலாளர் ஜெயராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளருக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், "திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் நேரில் சென்று, கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதா? என கண்டறியும் களப் பணியாளர்கள் பணி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அதன் காரணமாக ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர் களுக்கு கரோனா தொற்று பரவுவதை தடுக்க எந்தவித ஏற்பாடுகளையும் செய்யாமல், பொதுமக்களிடம் நேரடியாக சென்று தொற்று அறிகுறி உள்ளதா என கேட்க கூறியிருப்பது பலரைஅச்சமடையவும், அதிர்ச்சியடைய வும் செய்துள்ளது.

எனவே, கரோனா தொற்று கணக்கெடுக்கும் பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in