Regional02
குமரியில் 1,300 பேருக்கு கரோனா : தூத்துக்குடியில் 860 பேருக்கு தொற்று
திருநெல்வேலி மாவட்டத்தில் 488 பேருக்கு நேற்று புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,281 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 34,052 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 932 பேர் குணமடைந்திருந்தனர். சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். தற்போது, 5,907 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 456 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 797 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 345 பேர் குணமடைந்தனர். இதுவரை 15 ஆயிரத்து 545 பேர் குணமடைந்துள்ளனர்.
3,978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி
தூத்துக்குடி
தற்போது 7,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்.
