அரசு மருத்துவமனைகளில் சிவகங்கை எம்.பி ஆய்வு :

அரசு மருத்துவமனைகளில் சிவகங்கை எம்.பி ஆய்வு :
Updated on
1 min read

சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனை, திருவரங்குளம், வடகாடு, நெடுவாசல், கீரமங்கலம், கொத்தமங்கலம், அரையப்பட்டி, வெண்ணாவல்குடி, முத்துப்பட்டணம், வல்லத்திராகோட்டை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, அந்தந்தப் பகுதியில் உள்ள கரோனா தொற்றாளர்களின் விவரங்களை கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனைகளுக்கு முகக் கவசங்களை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in