கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - கிராமங்களில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் அறிவுரை

உளுந்தூர்பேட்டையை அடுத்த ஏ.குமாரமங்கலம் கிராமத்தில்  கரோனா கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கும் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் பி.ஆனந்தராஜ்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த ஏ.குமாரமங்கலம் கிராமத்தில் கரோனா கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கும் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் பி.ஆனந்தராஜ்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் ஆய்வு செய்தார்.

திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியபகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களில்மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை கூடுதல் ஊரக வளர்ச்சி இயக்குநர் பி.ஆனந்தராஜ் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய் வுக்குப் பின் அவர் கூறியது:

தமிழக கிராமப்புறங்களில் கரோனா2-ம் கட்ட பரவலை தடுத்திடும் வகையில்தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏ.குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள மாதிரி பள்ளியில் அமைந்துள்ள கரோனா சிகிச்சை மையத்தினை பார்வையிட்டு, நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்மனந்தல் கிராமத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கரோனா நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

கரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் கரோனா நோய்த் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வெளியில் செல் லாமல் கண்காணிப்பதோடு, அவர் களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும்.

கிராமப்புறங்களை சுத்தமாக வைத்திடவும், கிருமி நாசினி மற்றும் குளோரின் பவுடர் கொண்டு தூய்மையாக பராமரித்திட வேண்டுமெனவும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in