மலர்களில் மறைத்து கடத்திய 376 மதுபாட்டிகள் பறிமுதல் :

மலர்களில் மறைத்து கடத்திய 376 மதுபாட்டிகள் பறிமுதல் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மலர்களில் மறைத்து கடத்தப்பட்ட மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

குருபரப்பள்ளி போலீஸார் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு பகுதியில் வாகனச்சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு மலர்கள் பாரம் ஏற்றிச் செல்வதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். வாகனத்தில் போலீஸார் சோதனை மேற்கொண்டபோது மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகளுக்கு கீழே மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, முழுமை யாக சோதனையிட்ட போலீஸார் மலர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 376 மது பாட்டில்களை கைப்பற்றினர்.

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட மதுபாட்டில் களையும், சரக்கு வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களின் மதிப்பு ரூ.5 லட்சம். இவற்றை கடத்தி வந்த கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் ஆனந்த் (32) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in