

தூத்துக்குடி எம்பவர் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, ஆராய்ச்சி நடுவத்தின் செயல் இயக்குநர் ஆ.சங்கர், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழியிடம் அளித்த மனு விவரம்: கடந்த 2013-ம் ஆண்டு ரூ. 349.50 கோடி செலவில் 47.25 கி.மீ தொலைவிலான தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே வல்லநாடு பகுதியில் புதிதாக நான்குவழி ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது.
இந்த புதிய பாலம் பலமுறை சேதமடைந்து, குழி ஏற்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. தற்போது பாலத்தின் ஒரு பகுதியில் மூன்றாவது முறையாக பழுது ஏற்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெறுவ தால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பாலத்தை முழுமையாக சீரமைக்கும் வரை தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் சுங்க வரி வசூல் செய்யக் கூடாது. மேலும், பாலத்துக்கென ஒதுக்கப்பட்ட தொகை முறை யாக செலவிடப்பட்டதா என்பதை மத்திய கணக்கு தணிக்கை குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.