

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரு இடங்களில் தமாகா இளைஞரணி சார்பில் கரோனா தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனா பரிசோதனை, சிகிச்சை வழிமுறைகள் மற்றும் தடுப்பூசி போட விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு உட்பட்ட பிராமண பெரிய அக்ரஹாரம் நஞ்சப்பா நகர், மரப்பாலம் பேபி மருத்துவமனை எதிரில் ஆகிய இரு இடங்களில் கரோனா தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று (21-ம் தேதி) முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த மையங்களில் கரோனா அறிகுறிகள் பற்றிய விளக்கம், கரோனா பரிசோதனை தொடர்பான விவரங்கள், சிகிச்சைக்கான மருத்துவமனைகள், பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டல், உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் ஆக்சி மீட்டர் சோதனை, ஆக்சிஜன் உதவியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை, கரோனா தடுப்பூசி பதிவு உதவி மற்றும் விளக்கம் ஆகிய உதவிகள் செய்து தரப்படும். இந்த தகவல் உதவி மையம் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.