கிளி, புறா வளர்ப்போர் பதிவு செய்வது கட்டாயம் : வனத்துறை அறிவிப்பு

கிளி, புறா வளர்ப்போர் பதிவு செய்வது கட்டாயம் :  வனத்துறை அறிவிப்பு
Updated on
1 min read

திருநெல்வேலி மண்டல உதவி வன பாதுகாவலர் ஹேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செல்லப்பிராணிகளை வளர்க்கையில் வனஉயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி பாதுகாக்கப்பட்ட உயிரனங்களை வளர்க்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சட்டத்தின்படி அட்டவணையில் உள்ள உயிரினங்களான கிளி, புறா, பவளப்பாறைகள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருக்க மற்றும் வளர்க்க கூடாது. இதை மீறி வளர்க்கும்போது வனச்சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கவர்ச்சிகரமான உயிரினங்களை செல்லப்பிராணிகளாக வீடுகள் மற்றும் செல்லப்பிராணிகள் விற்கும் கடைகளில் வளர்க்கப் படுவது தெரியவந்துள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி கவர்ச்சிகரமான உயிரினங் களுடைய இருப்புநிலை, இனங்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றை பதிவு செய்வது அவசியம். Parivesh எனும் இணையதளத்தில் பதிவு செய்து வனத்துறையின் அனுமதியுடன் மட்டுமே வளர்க்க முடியும்.

Parivesh இணையதளத்தில் (http://parivesh.nic.in) பதிவு செய்வதற்கான கடைசி நாள் 15.3.2021 என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பலபேர் பதிவு செய்யாமல் இருப்பது தணிக்கையில் தெரியவருகிறது. செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் தானாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in