கிருஷ்ணகிரியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் :

கிருஷ்ணகிரி நகரில் திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
கிருஷ்ணகிரி நகரில் திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் கரோனவால் பாதிக்கப் பட்டுள்ளனர். நாள்தோறும் 600-க்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள் வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி நகரில் திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலை யத்தில் காலை 8 மணிக்கே தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதேபோல் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளவும் அதிகளவில் வருகின்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறும்போது, மக்கள் ஆர்வமாகவும், தாமாகவும் முன்வந்து கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதால் தொற்று பரவல் அபாயம் சற்று குறையும். தினமும் 150 பேர் கரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு, ஆதார் சரிபார்ப்புக்கு பின், ரத்த கொதிப்பு, சர்க்கரை அளவை ஆய்வு செய்து தடுப்பூசி போடப்படுகிறது.

இதுவரை, இம்மையத்தில் மட்டும், 4,500 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஒரு நாளில் எத்தனை தடுப்பூசிகள் கைவசம் உள்ளதோ அதுவரை போட்டு முடித்து வருகிறோம். தடுப்பூசிகள் வரும் நாட்களில் அதிகப்படுத்தப்பட்டு, வருகிற 24-ம் தேதி முதல், 18 வயது நிரம்பிய, ஆன்லைனில் விண்ணப்பித்த அனை வருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in