

திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நேற்று சற்று குறைந்தது.
மத்திய மண்டலத்தில் அரியலூர் 176, கரூர் 313, நாகப்பட்டினம் 652, பெரம்பலூர் 243, புதுக்கோட்டை 234, தஞ்சாவூர் 475, திருவாரூர் 805, திருச்சி 1,271 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி 1,224, 15-ம் தேதி 1,263, 16-ம் தேதி 1,569 என தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் 1,544 என சற்று குறைந்திருந்தது. இந்நிலையில், நேற்று இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,271 ஆக குறைந்துள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் கரூர் 9, நாகப்பட்டினம் 9, பெரம்பலூர் 2, புதுக்கோட்டை 2, தஞ்சாவூர் 9, திருச்சி 16 என 47 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.