முக்கூடலில் ஆக்சிஜன் வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் தொடக்கம் :

முக்கூடலில் கரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு
முக்கூடலில் கரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

முக்கூடலில் மத்திய பீடி தொழிலாளிகள் மருத்துவமனை யில் 175 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட நிர்வாகம் அமைத் திருக்கிறது. இதில் 120 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மைய த்தை தொடங்கி வைத்தபின் அமைச்சர் கூறும்போது, ``திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க, புறநகர் பகுதிகளில் இதுபோன்று 5 கரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப் படவுள்ளது” என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி அருகே கல்லூரில் பரிசோதனை முகாமை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனிடையே, மாற்றுத்திற னாளிகளுக்கான பிரத்யேக காணொலி காட்சி கரோனா தகவல் மையத்தை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த தகவல் மையத்தை 75980 00251 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in