

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று 1093 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 416 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரி ழந்துள்ளனர். மாவட்ட அளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 6753 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலத்தில் 603 பேருக்கு தொற்று
இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 315 பேரும், நகராட்சி களில் ஆத்தூர்- 8, மேட்டூரில் 4, நரசிங்கபுரத்தில் 3, வட்டார அளவில் ஓமலூரில் 32, சேலத்தில் 30, சங்ககிரியில் 32, ஆத்தூர், வீரபாண்டியில் தலா23, தலைவாசலில் 17, மகுடஞ் சாவடியில் 14, வாழப்பாடி, நங்கவள்ளியில் தலா 12, அயோத்தியாப் பட்டணம், கொங்கணாபுரத்தில் தலா 13, கெங்கவல்லியில் 11 என மாவட்டம் முழுவதும் 603 பேர் பாதிக்கப்பட்டனர்.