விழுப்புரத்தில் அமைச்சரிடம் - திருமண கோலத்தில் கரோனா நிவாரணம் வழங்கிய மணமக்கள் :

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியிடம் கரோனா நிவாரண நிதி வழங்கிய மணமக்கள்.
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியிடம் கரோனா நிவாரண நிதி வழங்கிய மணமக்கள்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியைச் சேர்ந்தவர் ராஜி மகன் ஹரிபாஸ்கர். இவர் நகை வேலை செய்து வருகிறார். இவருக்கும், மணலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் மகளான சாருமதி என்பவருக்கும் நேற்று திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு குறைந்த அளாவிலான நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அருகாமையில் உள்ள கோயிலில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு அவர்களின் திருமணம் நடைபெற்றது. இதனால் தனது திருமணத்திற்காக சேமித்து வைத்த பணத்தில் ரூ.51,000-ஐ மணமக்கள் தமிழக அரசின் கரோனா நிவாரணத்திற்காக விழுப்புரத்தில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டுக்கேச் சென்று மணக்கோலத்தி லேயே அவரிடம் வழங்கினர்.

அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மணமக்களை வாழ்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in