அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்களால் - சிவகங்கை கடைவீதியில் நெரிசல் : சாலைகளுக்கு ‘சீல்’ வைத்த போலீஸார்

சிவகங்கை பேருந்துநிலையத்தில் தற்காலிக தினசரி சந்தையில் காய்கறிகள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள்.
சிவகங்கை பேருந்துநிலையத்தில் தற்காலிக தினசரி சந்தையில் காய்கறிகள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள்.
Updated on
1 min read

சிவகங்கை கடை வீதியில் நேற்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சாலைகளுக்கு போலீஸார் ‘சீல்’ வைத்தனர்.

சிவகங்கை பேருந்து நிலை யத்தில் தினசரி சந்தை நடந்து வருகிறது. ஒரே இடத்தில் சந்தை நடப்பதால் நேற்று காலையில் அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அதே போல் நேரு பஜார் வீதியிலும் வாகனங்களில் செல்வோரால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீஸார் சிவகங்கை நகரின் முக்கிய வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்புகளால் அடைத்து ‘சீல்’ வைத்தனர்.

இதற்கிடையே பேருந்து நிலையத்தில் ஒரே இடத்தில் காய்கறிக் கடைகளை வைப்பதை தவிர்த்து, முக்கிய வீதிகளில் ஆங்காங்கே கடைகள் வைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாது என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in