நெல்லையில் கரோனா பாதிப்பு குறைகிறது : தூத்துக்குடி மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பு

நெல்லையில் கரோனா பாதிப்பு குறைகிறது :  தூத்துக்குடி மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே ஏறுமுகத்தில் இருந்த கரோனா பாதிப்பு நேற்று குறைந்துள்ளது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 800-க்குமேல் இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 691- ஆக இருந்த நிலையில், நேற்று அது பாதிக்கும்கீழ் குறைந்து 330 ஆக இருந்தது.

திருநெல்வேலி மாநகரில் 143, அம்பாசமுத்திரம்- 34, மானூர்- 18, நாங்குநேரி- 11,பாளையங்கோட்டை- 40, பாப்பாக்குடி- 13, ராதாபுரம்- 12, வள்ளியூர்- 42, சேரன்மகாதேவி- 6, களக்காடு- 11. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர்.

பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு வாரமாகும் நிலையில், பொதுமக்களும் போதிய ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது. இதுபோல், பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி

தூத்துக்குடி

பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு வாரமாகும் நிலையில், பொதுமக்களும் போதிய ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in