தஞ்சாவூர் அருகே ராணுவ வீரர்கள் வீட்டில் - 40 பவுன் நகை, பணம் திருடிய ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் கைது :

தஞ்சாவூர் அருகே ராணுவ வீரர்கள் வீட்டில் -  40 பவுன் நகை, பணம் திருடிய ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் கைது :
Updated on
1 min read

தஞ்சாவூர் அருகே ராணுவ வீரர்கள் வீட்டில் 40 பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் ரொக்கம் திருடிய வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மெலட் டூர் அருகே உள்ள குண்டூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் உமாமகேஸ் வரன். இவரது மகன்கள் கபாலீஸ்வரன்(35), பிரகதீஸ்வரன் (32) இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கபாலீஸ் வரன், பிரகதீஸ்வரன் ஆகிய இருவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள். விடுமுறை காரணமாக தற்போது ஊர் திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 4 தினங் களுக்கு முன்பு குண்டூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தங்களது வீட்டில் மின்சாரம் இல்லாததால், பக்கத்து தெருவில் உள்ள தங்களுடைய பழைய வீட்டில் குடும்பத்துடன் இரவு தங்கினர்.

மறுநாள் புதிய வீட்டுக்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக் கப்பட்டு, அலமாரியில் இருந்த 40 பவுன் நகைகள், ரூ.90 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுதொடர்பாக, மெலட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தஞ்சா வூர் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ் சய் உத்தரவின் பேரில், அய்யம்பேட்டை இன்ஸ் பெக்டர் உமாமகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார், தீவிர விசாரணை நடத்திவந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த ராஜபாண்டி மகன்கள் சக்தி வேல்(30), சிவா(28), ராஜ்(24), கணேசன் மகன்கள் முருகன்(45), மாரியப்பன்(44) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் குண்டூரில் நகைகள், பணம் திரு டியது தெரியவந்தது. இதைய டுத்து 5 பேரும் கைது செய்யப் பட்டனர். அவர்களிடமிருந்து திருடு போன நகைகள், பணம் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் 5 பேரும் அம்மாப் பேட்டை, சாலியமங்கலம் பகுதி யில் சவுரி முடி வியாபாரம் செய்வதுபோல, ஊர் ஊராகச் சென்று பகல் நேரத்தில் வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடு வது தெரியவந்தது. திருட்டு வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in