

திருநெல்வேலி மாவட்டத்தில் இ-பதிவு முறை நேற்று அமலுக்கு வந்ததால், போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் திருமணம், முக்கிய உறவினர்கள் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோருக்கான தேவை, நேர்காணல் போன்ற அத்தியாவசிய பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை அமலுக்கு வந்துள்ளது.
அதேநேரத்தில் பால்,மளிகை, காய்கறி, மருந்து, உணவுபோன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வோருக்கு இ-பதிவு அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்ட எல்லைகளில் வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி இ-பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்தனர்.
இ- பதிவு செய்யாத வர்களின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. கிருஷ்ணாபுரம், மாறாந்தை, கங்கைகொண்டான் உள்ளிட்ட இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீ ஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகர பகுதிகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.