ஆதரவற்ற இரு குழந்தைகளை தத்து கொடுப்பதாக கூறி மோசடி : குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை

ஆதரவற்ற இரு குழந்தைகளை தத்து கொடுப்பதாக கூறி மோசடி :  குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை
Updated on
1 min read

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இரு குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பி மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் ஏமாற வேண்டாம், என குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் 2 வயதுள்ள ஒரு பெண் குழந்தையும், பிறந்து 2 மாதமே ஆன ஆண் குழந்தையும் ஆதரவற்ற நிலையில் உள்ளது. குழந்தைகளின் பெற்றோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டனர். இந்த செய்தியை பரவச்செய்யுங்கள். ஏதெனும் நல்ல உள்ளம் கொண்டவரும், குழந்தை தேவை உள்ளவர்களும் பார்த்து பயன்பெறட்டும்.

குழந்தை இல்லாதவர்கள் எவரேனும் தத்தெடுக்க விரும்பினால் தொடர்பு கொள்ள வும் என அந்த தகவலில் ஒரு போன் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இந்த செய்தி தவறானது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு குழந்தை யையும் தன்னிச்சையாக தத்து கொடுக்கவோ, எடுக்கவோ முடியாது என்பதுதான் சட்ட மாகும். தவறான செய்திகளை பரப்பி சிலர் மோசடியாக பணம் சம்பாதிக்க முயல்கின்றனர்.

குழந்தைகளை சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் தத்தெடுப்பது, தத்தெடுப்பு சட்ட நடைமுறைகள் தெரியாமல் அதுகுறித்த தவறான செய்திகளை பரப்புவது, குழந்தைகளை பணம் கொடுத்து விற்பது, வாங்குவது ஆகியவை குற் றமாகும். தத்தெடுப்பு குறித்த விவரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in