தண்டராம்பட்டு அருகே சூதாடிய 7 பேர் கைது :

தண்டராம்பட்டு அருகே சூதாடிய 7 பேர் கைது   :
Updated on
1 min read

தண்டராம்பட்டு அருகே சூதாடிய வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.23,510 பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் ஐயனார் கோயில் அருகே சூதாட்டம் நடைபெற்று வந்தது. இதுகுறித்து தகவலறிந்த தானிப்பாடி காவல்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த பகுதியில் சூதாடிய 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், சிலர் தப்பி ஓடிவிட்டனர்.

அதில், அவர்கள் தண்டராம்பட்டு மற்றும் சுற்று பகுதியைச் சேர்ந்த ஓம்சக்திவேல்(34), ராமன்(37), பாண்டியன்(29), சிவக்குமார்(47), கலையரசன்(27), கார்வண்ணன்(50), பிரபு(35) ஆகியோர் என்பது தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு 7 பேரையும் கைது செய்தனர். மேலும், சூதாட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து 8 இரு சக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் ரூ.23,510 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in