தன்வந்திரி பூஜை :

தன்வந்திரி பூஜை  :
Updated on
1 min read

கலசப்பாக்கம் அடுத்த காந்தப்பாளையம் கிராமத்தில் உள்ள  ஆதி சிவலிங்காச்சார்ய குரு சுவாமிகள் ஆதின மடாலயத்தில் கரோனா பரவலை தடுக்க தன்வந்திரி பூஜை நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காந்தப்பாளையம் கிராமத்தில்  ஆதி சிவலிங்காச்சார்ய குரு சுவாமிகள் ஆதின மடாலயம் உள்ளது. இந்த மடாலயத்தில் கரோனா பரவலை தடுக்கவும், உலக நன்மைக்காகவும் தன்வந்திரி பூஜை, அமிர்த மிருத்திஞ்ஜேஸ்வரர் பூஜை மற்றும்  வீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகளின் 1,262-ம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று நடைபெற்றது.

65-வது குரு மகா சன்னிதானம்  சிவ சிவராஜ ஞானாச்சார்ய குரு சுவாமிகள் தலைமையிலும், வேத பாட சாலையின் முதல்வர் சிவ ஞானசேகரன் முன்னிலையிலும், தன்வந்திரி பூஜை, ஹோமங்கள் மற்றும் குரு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இதையடுத்து, நாமகிரிப்பேட்டை சிவபிரகாசம் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதுகுறித்து மடாலய செய்தி தொடர்பாளர் ஜனார்த்தனன் கூறும்போது, “பக்தர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் இருந்தபடியே மானசீகமாக பூஜையில் பங்கேற்றனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in