கடைகள் அடைப்பு: பிற்பகலில் வெறிச்சோடிய விழுப்புரம் :

எப்போதும் பரபரப்பாக இருக்கும் விழுப்புரம் எம்.ஜி.ரோடு வெறிச்சோடி காணப் படுகிறது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் விழுப்புரம் எம்.ஜி.ரோடு வெறிச்சோடி காணப் படுகிறது.
Updated on
1 min read

கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை 10 மணிக்கு அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. சில ஹோட்டல்கள் மட்டும் உணவு வகைகளை பார்சலாக வழங்கின. சாலையில் வந்த வாகனங்களை போலீஸார் முழுமையாக விசாரணை மேற்கொண்ட பின்னரே தொடர்ந்து செல்ல அனுமதி அளித்தனர்.

மாவட்ட எல்லைகளில் 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு காவல் துறை, சுகாதாரம் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10,11-ம் தேதிகளில் மட்டும், தேவையின்றி சுற்றுவோரின் வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு 2,776 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்து வந்த 3 நாட்கள் அபராதம் ஏதும் விதிக்கப்படாத நிலையில் நேற்று மீண்டும் அபராதம் விதிக்கும் பணி தொடங்கியது.

சுமார் 5 சதவீத வாகனங்கள் மட்டும் காலை 10 மணிக்கு மேல் இயங்கின. அவையும் நேரம் செல்ல செல்ல குறைந்து பிற்பகல் 1 மணிக்கு பிறகு முழுவதும் நிறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in