சிவகங்கையில் அமைச்சர் ஆய்வுக் கூட்டத்தில் - சமூக இடைவெளியின்றி திரண்ட கட்சியினர் :

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தபோது கூட்டரங்குக்கு வெளியே காத்திருந்த கட்சியினர், ஊழியர்கள்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தபோது கூட்டரங்குக்கு வெளியே காத்திருந்த கட்சியினர், ஊழியர்கள்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கட்சியினர் சமூக இடைவெளியின்றி திரண்டனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் பழனிசாமி, மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜோதி நிர்மலாசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் நடந்த அரங்கில் கட்சியி னர் ஏராளமானோர் சமூக இடை வெளியின்றி திரண்டனர். பலர் அரங்கத்துக்கு வெளியேயும் காத்திருந்தனர். ஒரே சமயத்தில் குவிந்த கட்சியினரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் தவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in