

திருநெல்வேலி மாவட்டம் களக் காட்டில் கனமழையால் தற்காலிக மண்பாதை சேதமடைந்தது.
களக்காட்டில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரையில் மழை பெய்தது. கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. களக்காடு அருகே ஐந்துகிராமத்தில் நாங்குநேரியான் கால்வாயின் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. கடந்த பிப்ரவரியில் இப்பணிகள் தொடங்கியிருந்தது. பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த பாலப்பணிகள் நடை பெற்றதை அடுத்து கால்வாயில் மண்பாதை தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது. இவ்வழியாக கிராம மக்கள் சென்றுவந்தனர்.
தொடர் மழையால் கால்வாயில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த தற்காலிக பாதை சேதமடைந்து அவ்வழியாக யாரும் செல்ல முடியவில்லை. ஐந்துகிராமத்திலிருந்து சிவபுரம், கள்ளியாறு மற்றும் வனத்துறை அலுவலர்கள் குடியிருப்புகளுக்கு அப்பாதை வழியாகவே செல்ல வேண்டும். பாதை சேதமடைந்ததால் சுற்றுவட்டார பகுதியிலுள்ள விளை நிலங்களு க்கும் விவசாயிகள் செல்ல முடியவில்லை. சேதமடைந்த மண்பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுவட்டார கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாங்குநேரி எம்எல்ஏ ரூபிமனோ கரன் அப்பகுதிக்கு வந்து ஆய்வு மேற் கொண்டார். பாலப்பணிகள் முடிவடைந்துவிட்டதால் அதை போக்குவரத்துக்கு திறக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாதை சேதமடைந்ததால் சுற்றுவட்டார பகுதியிலுள்ள விளை நிலங்களு க்கும் விவசாயிகள் செல்ல முடியவில்லை.