

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக எஸ்பி தீபா காணிகருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர்கள் கோபால் மற்றும் மூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் நடத்திய சோதனையில், தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் (45) என்பவர் சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபான பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 2250 டாஸ்மாக் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.