

குடியிருப்பு பகுதியில், இறந்த பெண்ணின் சடலத்துடன் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்ட தாகக் கூறி, அதைக் கண்டித்து பொது மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணி பழைய பேருந்து நிலையம் பின்புறம் ரயில்வே லைன் கிழக்கு தெரு உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் நேற்று காலை இறந்த பெண்ணின் சடலத்துடன் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஆளில்லாமல் நிறுத்தப் பட்டிருந்தது. ஆம்புலன்ஸில் இருப்பது கரோனாவால் இறந்தவரின் சடலம் என அப்பகுதியில் வதந்தி பரவியது. இதையடுத்து, அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு, குடியிருப்பு பகுதியில் சடலத்துடன் ஆம்புலன்ஸ் வாக னத்தை நிறுத்தியதாகக் கூறி, அதைக் கண்டித்து பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கமலக்கண்ணன், பேராவூரணி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வீரமணி ஆகி யோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் என்.அசோக்குமார் தொலைபேசி யில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் பேசினார்.
பின்னர், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சமூகத் தைச் சேர்ந்த பெண், நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு காரண மாக இறந்து விட்டதாகவும், அவரை அடக்கம் செய்ய மையவாடிக்கு வரும் பணியாளர்கள் வரத்தாமத மானதால், அங்கு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி, சடலம் வைக்கப்பட்டிருந்த ஆம்பு லன்ஸ் அங்கிருந்து மையவாடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அற நிலையத் துறை அலுவலர் ஆறுமுகம், செங்கொல்லை சோமு ஆகியோர் கூறும்போது, ``இங் குள்ள குடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆங் காங்கே நிறுத்தப்படுகின்றன. சடலத்தை ஏற்றிச் செல்லும் வாகனங்களை குடியிருப்பு பகுதியில் சாலையில் வைத்து கழுவி சுத்தம் செய்கின்றனர். மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இப்பகுதி யிலேயே அமர்ந்து மது அருந்தி விட்டு அட்டகாசம் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள், பெண்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே, இங்கு ஆம்புலன்ஸ் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.