

தஞ்சாவூரில் ஆயுதப்படை பெண் காவலர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியா(23). இவருக்கும், தருமபுரியைச் சேர்ந்த வினோத்குமாருக்கும் திருமண மாகி ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவரும், குழந்தையும் தருமபுரி யில் வசித்து வரும் நிலையில், பிரியா தஞ்சாவூர் தமிழ்ப் பல் கலைக்கழகக் காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், பிரியா தனது வீட்டில் நேற்று மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.