

ஓசூர் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிருஷ்ணகிரி மா வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜெயராமன் கோரிக்கை விடுத் துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு, அவர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பெங்களூருக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது, கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தொற்றை சமாளிக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவத் துறையில் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை.
கடுமை யாக பாதிக்கப்படு பவர்கள் வெண்டி லேட்டருடன் கூடியசிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலையுள்ளது.
ஓசூர் அரசு மருத்துவமனையில் இந்த வசதி இல்லை. எனவே, ஓசூர் அரசு மருத்துவமனையில் வெண்டி லேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.