அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு :
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பகல் 12 மணியளவில் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக சிற்றாறு ஒன்றில் 38 மிமீ., மழை பெய்திருந்தது. முள்ளங்கினாவிளையில் 35, சிவலோகத்தில் 26, பேச்சிப்பாறையில் 12, பெருஞ்சாணி, புத்தன் அணையில் தலா 10 மிமீ., மழை பதிவானது.
தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 218 கனஅடி, பெருஞ்சாணி அணைக்கு 116,சிற்றாறு ஒன்று அணைக்கு 67, சிற்றாறு இரண்டு அணைக்கு 108 கனஅடி தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து 123 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் 55 அடி, பொய்கையில் 16.80 அடி, மாம்பழத்துறையாறில் 19 அடி, சிற்றாறு ஒன்றில் 7.60 அடி, சிற்றாறு இரண்டில் 7.71 அடி தண்ணீர் உள்ளது.
பாபநாசம் நீர்மட்டம் சரிவு
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.55 அடியாக இருந்தது. 5 கனஅடி தண்ணீர் வருகிறது. 250 கனஅடிதண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள பிறஅணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்): சேர்வலாறு- 112.30 அடி (156), வடக்குபச்சையாறு- 42.55 (50), நம்பியாறு- 12.53 (22.96)மற்றும் கொடுமுடியாறு- 5 அடி (52.25). அம்பாச முத்திரத்தில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
