வேலூர் மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் - ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கரோனா படுக்கைகள் நிரம்பின : அடுத்த இரண்டு வாரங்களில் ஆக்சிஜன் வசதியை அதிகரிக்க நடவடிக்கை

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு எதிரே ஆக்சிஜன் இணைப்புடன் கூடுதல் படுக்கை வசதி கொண்ட தற்காலிக அரங்கை ஏற்படுத்தி வருகின்றனர். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு எதிரே ஆக்சிஜன் இணைப்புடன் கூடுதல் படுக்கை வசதி கொண்ட தற்காலிக அரங்கை ஏற்படுத்தி வருகின்றனர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களில் வரும் நோயாளிகள் பலர் அவசர சிகிச்சை பிரிவின் முன்பாக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மூச்சுத்திணறல் பாதிப்பு அதிகம் இருக்கும் நோயாளிகள் சிலர் ஆம்புலன்ஸ் வாகனத் திலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகிறது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டுகள் முழுமையாக நிரம்பியுள்ள நிலையில் புதிய நோயாளிகள் வருகையால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா படுக்கை வசதிகள் நிரம்பி வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் தற்போதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 33,764 பேராக உள்ளது. இவர்களில், 28,657 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 3,933 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 454 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 4,302 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிரம்பிய ஆக்சிஜன் படுக்கைகள்

இதில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கைகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் சுமார் 2,233 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சைக்காக புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காத நிலை உள்ளது.

கூடுதல் படுக்கை வசதிகள்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போதுள்ள ஆக்சிஜன் படுக்கை கள் அனைத்தும் நிரம்பிய நிலையில், அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு எதிரே தற்காலிக அரங்கு ஏற்படுத்தி அங்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுமார் 20 படுக்கை வசதிகளை ஏற்படுத்த உள்ளனர். இதுதவிர 34 ஐசியு படுக்கைகள் வசதியை வரும் 14-ம் தேதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளனர்.

அதேபோல், பிற வார்டுகளில் வரும் 16-ம் தேதிக்குள் புதிதாக 140 ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்த உள்ளனர். இது தவிர சீமாங் கட்டிடத்தில் அடுத்த 15 நாட்களுக்குள் கூடுலாக 90 ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க உள்ளனர்.

குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் கூடுதலாக 50 படுக்கைகள், பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் 37 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாக அடுத்த ஒரு வாரத்தில் தயார் செய்ய உள்ளனர். புதிய ஏற்பாடுகள் மூலம் அடுத்து வரும் நாட்களில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in