

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.
கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 398 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 247 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் 97.80 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 97.83 அடியானது. நீர் இருப்பு 62.06 டிஎம்சி-யாக உள்ளது.