சிதம்பரம் ரேஷன் கடைகளுக்கு ரயில் மூலம் - தெலங்கானாவில் இருந்து 1,400 டன் அரிசி வந்தது :

சிதம்பரம் ரயில் நிலையில் தெலங்கானாவில் இருந்து ரயிலில் வந்த மத்திய தொகுப்பு அரிசி மூட்டைகள் இறக்கப்பட்டு லாரியில் ஏற்றப்படுகிறது.
சிதம்பரம் ரயில் நிலையில் தெலங்கானாவில் இருந்து ரயிலில் வந்த மத்திய தொகுப்பு அரிசி மூட்டைகள் இறக்கப்பட்டு லாரியில் ஏற்றப்படுகிறது.
Updated on
1 min read

சிதம்பரம் பகுதி ரேஷன் கடைகளுக்கு தெலங்கானாவில் இருந்து ரயில் மூலம் 1,400 டன் அரிசி வந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ரேஷன் கடைகள் மூலம் மத்திய அரசு பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி அளிக்க முடி செய்துள்ளது. இதன் படி மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, அதாவது தெலங்கான மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் நேற்று 1,400 டன் அரிசி, சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்தது. அவை லாரிகள் மூலம் சிதம்பரத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழகம் மூலம் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக மத்திய கிடங்கு மேலாளர் துளசிராமன் மேற்பார்வையில் இந்திய உணவு கழக மேலாளர் ராமலிங்கம், உதவியாளர்கள் சரவணன், பாலஜி ஆகியோர் கொண்ட குழுவினர் ரயில் நிலையித்தில் அரிசி மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது போல கரோனாவுக்காக பொதுமக்களுக்கு அரிசி வழங்க மத்திய அரசுன் பொதுத் தொகுப்பில் இருந்து அரிசி மூட்டைகள் அதிக அளவில் ரயிலில் வர வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in