செவிலியர் தின கொண்டாட்டம் :

திண்டுக்கல்லில் நடந்த செவிலியர் தினவிழாவில் செவிலியர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய மருத்துவர் சுரேஷ்பாபு.
திண்டுக்கல்லில் நடந்த செவிலியர் தினவிழாவில் செவிலியர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய மருத்துவர் சுரேஷ்பாபு.
Updated on
1 min read

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

மாநிலத் துணைச் செயலாளர் பாலச்சந்திரபோஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாலாஜி, மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளாரன்ஸ் நைட்டிங்கேல் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் சுப்பிரமணி, செவிலிய கண்காணிப்பாளர் அமுதா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். செவிலியர்களுக்கு புத்தகங்கள், இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விருதுநகர்

சிவகாசி ஆலங்குளம் அருகே உள்ள கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். மருத்துவர் தன்சில்லாஸ் முன்னிலை வகித்தார்.

தலைமை செவிலிய கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி சிறப்புரையாற்றினார்.

ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் பிஏசிஆர் அரசு மருத்துவமனையிலும், அரசு மகப்பேறு மருத்துவமனையிலும் செவிலியர் தினவிழா கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் மாரியப்பன் செவிலியர்களுக்கு கதர் ஆடை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை செவிலியர்கள் விஜயலட்சுமி, லீலா மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர். மருத்துவர்கள் மேகலா, உமா ஆகியோர் செவிலியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in