‘செவிலியர் தினத்தை கொண்டாடவில்லை’ - கரோனாவை ஒழிப்பதில்தான் தீவிர கவனம் : திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருத்து

‘செவிலியர் தினத்தை கொண்டாடவில்லை’ -  கரோனாவை ஒழிப்பதில்தான் தீவிர கவனம் :  திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருத்து
Updated on
1 min read

கரோனாவை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்துவதால் செவிலியர் தினத்தை கொண்டாடவில்லை என திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் தெரிவித்தனர்.

செவிலியர் நட்சத்திரம் என்ற ழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங் கேலின் பிறந்த நாளான மே 12-ம் தேதி, சர்வதேச செவிலியர் தின மாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கரோனா வைரஸ் உலகையே அச் சுறுத்தி வரும் நிலையில், கரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளவர்க ளுக்கு சிகிச்சை அளித்து வரும் செவிலியர்களுக்கு, செவிலியர் தினமான நேற்று பலரும் பாராட்டு களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

ஆனால், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை யில் நேற்று செவிலியர் தினம் கொண்டாடப்படவில்லை.

இதுதொடர்பாக அரசு மருத்துவ மனை செவிலியர்கள் கூறியது: “கரோனா தொற்றாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக, ஓராண்டுக்கும் மேலாக கரோனாவை சுற்றியே எண்ணம் இருப்பதால் ஒருவித மனஅழுத் தமும் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் போதிய எண்ணிக்கையில் செவிலியர்கள் இல்லாத நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது.

இதனால், பணிச் சுமையுடன், கரோனா அச்சமும் உள்ள இந்தச் சூழலில் செவிலியர் தினத்தை கொண்டாடும் எண்ணம் யாருக்கும் வரவில்லை. கொண்டாடும் மன நிலையும் இல்லை. கரோனாவை ஒழிப்பதிலேயே அனைவருக்கும் முழுக் கவனமும் உள்ளது. கரோனா ஒழிந்த பிறகு அடுத்த ஆண்டு செவிலியர் தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடுவோம்” என் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in