

திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள பல்லபுரம் ஊராட்சி செயலாளராக இருப் பவர் சந்திரசேகர் (53). இவர் அதே ஊரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். தனது கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது பெற்றோர் களிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக சிறுமிகளின் பெற் றோர் அளித்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீ ஸார் போக்ஸோ சட்டத் தின் கீழ் சந்திரசேகரை நேற்று கைது செய்தனர்.