

அவிநாசியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ரவிவெங்கடாசலபதி (53). இவரது வீட்டின் சுப நிகழ்ச்சிக்காக வந்திருந்த 12 வயது சிறுமியை, தனது பழைய வீட்டுக்கு ரவி வெங்கடாசலபதி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதையறிந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ், அவிநாசி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி வழக்கு பதிந்து ரவிவெங்கடாசலபதியை கைது செய்தார்.