

நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் கரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பாலசுப்ரமணியம் (52) என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும், காய்ச்சல் குணமடையாததையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.